தமிழகத்தில் தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க முடிவு... முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்....

வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயருகிறது.... கலால் வரியை உயர்த்த தமிழக அமைச்சரவையில் அதிரடி முடிவு......

8 வழி பசுமை சாலைக்கு விளை நிலங்களை அளக்க விவசாயிகள் எதிர்ப்பு.... கிணற்றில் குதித்தும், உடலில் மண்ணெண்ணை ஊற்றியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு........

பசுமை வழி சாலை குறித்து தவறான தகவல்களை அளிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..... பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு

13 பேரை பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.... இன்று விசாரணையை தொடங்குகிறது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்.... முன்னாள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் விசாரணை நடத்த முடிவு....

UGC எனும் பல்கலைக்கழக மானியக்குழு கலைப்பு.... HIgher Education Commission of India எனும் புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு....

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு.... மாணவர்கள் வசதிக்காக இணையதளத்திலும் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு......

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு.... காமக்கொடுமுகி நிர்மலாதேவியிடம் இன்று குரல் மாதிரி சோதனை......

மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரே ஆண்டில் 10 கோடி ரூபாய் லஞ்சம்... போலி சான்றிதழ் பெற்றுக்கொண்டு ஓட்டுனர் உரிமம் வழங்கியது அம்பலம்... 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை........

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க இலங்கை அரசு நடவடிக்கை.... விடுதலைப் புலிகளை தாலாட்ட அவசியம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி அதிரடி......

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது நடப்பு சாம்பியன் ஜெர்மனி.... 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தென் கொரியா வெற்றி...

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV